அன்னையர் தினத்திற்கு குடும்ப போட்டோ வெளியிட்ட குஷ்பு!

அன்னையர் தின ஸ்பெஷலாக நடிகை குஷ்பு ட்விட்டரில் அருமையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் தங்களின் தாயுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
புகைப்படம்
அன்னையர் தின ஸ்பெஷலாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது மகள்கள் மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொபைல் பிக்சராக வைத்தார்.
க்யூட் குஷ்பு
ட்விட்டரில் வெளியிட்ட குடும்ப புகைப்படத்தை பார்த்த ஒருவர், க்யூட் குடும்பம் மேடம் என்று கமெண்ட் போட்டுள்ளார்.

தேவதைகள்
தேவதைகளின் வம்சத்தை அடையாளம் காண பிரம்மன் படைத்த வரமே குஷ்புவின் குடும்ப மங்கைகள் என்பதுபோல் அழகியலாய் ஜொலிக்கிறார்களே அன்பினிலே என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

வெனிஸ் கோடை விடுமுறையை கழிக்க குஷ்பு தனது கணவர் சுந்தர் சி, மகள்களுடன் வெனிஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்தாலும் அரசியல் நிலவரம் குறித்து அவ்வப்போது ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Comments

comments