பாகுபலி’ சிவகாமியாக நடிக்க விரும்பும் முன்னணி நடிகை!

தடையறத் தாக்க’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பிறகு நடித்த ‘என்னமோ ஏதோ’ படம் சரியாகப் போகாததால் தமிழ்ப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டு தெலுங்கில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது கார்த்தி ஜோடியாக ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். மகேஷ்பாபு ஜோடியாக ரகுல் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘ஸ்பைடர்’ படமும் தமிழில் வெளியாக இருக்கிறது. இவை தவிர, செல்வராகவன் இயக்கப்போகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகைப் போலவே தமிழிலும் எனக்கான வாய்ப்பு தேடி வரும் என உறுதியாக நம்பினேன். அந்த நம்பிக்கை பலித்துவிட்டது என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். பாகுபலி படத்தின் சிவகாமி கேரக்டர் போல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் ரகுலின் லட்சியமாம்.

ரகுல் ப்ரீத் சிங்கின் புன்னகைக்கு தமிழ், தெலுங்கு என பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் 62-வது படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்கலாம் என மகிழ்ச்சியாக இருக்கிறாராம் ரகுல் ப்ரீத் சிங்

Loading...

Comments

comments