24 வாரங்கள் ஆகியும் மண்டையோடு வளராத கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

குறைபாடு உள்ள 6 மாத கருவைக் கலைக்க, பெண் ஒருவர் அனுமதி கோரிய வழக்கில்இ,உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

புனேவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது வயிற்றில் வளரும் கருவிற்கு 24 வாரம் ஆகியும் அதாவது 6 மாதம் ஆன பின்பும் மண்டை ஓடு வளரவில்லை என்பதால், அந்த குழந்தை பிறந்தாலும் உயிரிழக்கும் என்று தெரிவித்திருந்தார். இதனால் தனது கருவைக் கலைக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி, 24 வாரங்கள் ஆகியும் கருவிற்கு மண்டை ஓடு வளராமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Loading...

Comments

comments

Post Comment