செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கின்றார் சூப்பர் ஸ்டார்!

காலா படப்பிடிப்புக்கு பிறகு, வரும் செப்டம்பர் மாதம் 2-ஆவது வாரத்தில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சு மூலம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களை எப்போது சந்திப்பார் என்று மற்ற மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

காலா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.

 

கடந்த மே மாதம் நடந்த சந்திப்பின் போது அரசியல் குறித்துப் பூடகமாக பேசியது போல இல்லாமல், இந்த சந்திப்பின்போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக அறிவிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அரசியலுக்கு வருவரா சூப்பர் ஸ்டார். எல்லாம் அந்த படையப்பாவுக்கு தான் வெளிச்சம்.

Loading...

Comments

comments

Post Comment