பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

பிளஸ் ஒன் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்பட்டுள்ளது . இந்தாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பால் பிளஸ்2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுதேர்வு உள்ளதால் கட்டுப்பாடுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளார்கள் . மதிபெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது . அடுத்தாண்டு முதல் புதிய பாடங்கள் வருவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகுறித்து தேர்வுத்துறை தெரிவித்துள்ள கருத்துகளுக்கு  கல்வித்துறை அனுமதியளித்து ஏற்றுள்ளது.

இதன்படி வரும் மார்ச் தேர்வில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அக்டோபர் மாதம் தேர்வில் பங்கேற்க முடியும் அல்லது 2019 வருடம் தேர்வில் பங்கேற்கலாம் .

அதற்கு பின் தேர்ச்சி பெறாவிட்டால் தேர்வு எழுத முடியாது எனவே 2019க்குள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . பத்தாம் வகுப்பு பூர்த்தி செய்த தனிதேர்வாளர்கள் இரண்டு வருடங்கள் முடிந்திருப்பின் இவ்வாண்டு அக்டோபரில் தனி தேர்வு எழுதலாம்.

2016இல் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 2018 வரை பிளஸ் 2 தேர்வை 1200 மதிபெண் முறையில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஆதலால் தனிதேர்வு எழுதுவோர் 2018க்குள் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேர்வுத்துறையின் அறிவிப்பானது தனிதேர்வு எழுதுவோர்க்கு தேர்வின் தகவல்கள் தனித்தேர்வு எழுதுவோர்க்கு தேர்ச்சி பெறும் வேகத்தை அதிகரிக்க செய்யும் .

இத்தனை மாற்றங்களும் பாடத்திட்டங்கள் மாற்ற பெறுவதால் ஏற்ப்பட்டுள்ளது . புதிய பாடத்திட்டங்கள் தரமானதாகவும்  நீட் போன்ற மத்திய அரசு நடத்தும் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக இருக்குமென்பதால் மாணவர்களின் தேர்வு கண்ணோட்டமும் மாறுபடும் அத்துடன் தேர்வை அணுகும் போக்கிலும் மாற்றம் இருக்கும் .

வரும் கல்வியாண்டின் பொது தேர்வு 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அணுகும் முறை முற்றிலும் வேறுபடும் . மூன்று வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் ஒன்றுபோல் அறிவித்து தேர்வுத்துறை மாணவர்களை ஒரே சீராக தேர்வுக்கு தயார் செய்கிறது என்பதால் தேர்வுத்துறைக்கும் மூன்று பொதுதேர்வுகள் நடத்தும் முறைகள் புது அனுபவமாக இருக்கும் எனக் கருதபடுகின்றது .

 

 

Loading...

Comments

comments

Post Comment