9 வயதுச் சிறுவனுக்கு திருமணம்.. முதலிரவுக் காட்சி… பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் சீரியலை நிறுத்திய தொலைக்காட்சி!

 

சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது. சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியாகி.

கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில் சிக்கியது. சீரியலின் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.

 


திருமணம்:

9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை காட்டி வந்தனர். 9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் நடித்தனர்.புகார் ஒரு சிறுவன் இளம்பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து முதல் இரவு அறைக்குள் செல்வது ஆகியவற்றை பார்த்த மக்கள் சீரியலுக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.

 


எதிர்ப்பு புகார்கள் எழுந்ததை அடுத்து சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 8. 30 மணியில் இருந்து 10.30 மணிக்கு மாற்றினார்கள். அப்படியும் எதிர்ப்பு வலுத்தது.நிறுத்தம் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் ஒளிபரப்பவில்லை.

சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நிறுத்தம் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் ஒளிபரப்பவில்லை. சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Loading...

Comments

comments

Post Comment