மலையாள நடிகை கடத்தல் வழக்கில் காவியா மாதவனிடம் பொலிஸார் விசாரணை!

பிரபல தமிழ் – மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார் முன்னணி நடிகர் திலீப். அவர் மனைவி காவ்யா மாதவனுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளான் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில்.

கேரளாவில் ஓடும் காரில் நடிகையைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகர் திலீப்பும் கைதானார்.பல்சர் சுனிலின் வாக்குமூலத்தில் நடிகை கடத்தல் வழக்கில் ‘மேடம்’ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார்.

அவர் திலீப்பின் 2-வது மனைவியான நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக பல்சர் சுனில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வெளியே வந்த பல்சர் சுனில், நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பில்லை என கூறிவிட்டார். இதனால் இந்த கடத்தலில் வேறு முன்னணி நடிகைக்கு தொடர்பிருக்குமோ என விசாரித்து வருகின்றனர்.

Loading...

Comments

comments

Post Comment