இருபது ஆண்டுகள் கழித்து திரைக்கு வரும் சல்மான் கானின் ஜூட்வா-2..!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானின் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம், இருபது ஆண்டுகள் கழித்து ஜூட்வா-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார்.

இவருடன் டாப்சி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்க, டேவிட் தவான் இயக்குகிறார். இந்நிலையில் ஜூட்வாவை தொடர்ந்து தனது லவ் படத்திலும் நடிக்க வருண் தவான் தான் செட்டாவார் என்று கூறியிருக்கிறார் சல்மான். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘நானும்,   ரேவதியும் நடித்த லவ் படத்தை ரீ-மேக் செய்ய சாத்திய கூறுகள் உள்ளது. அப்படி அந்தப்படம் ரீ-மேக்கானால், அதில் வருண் தவான் நடிக்கலாம், அவர் பொருத்தமாக இருப்பார்’ என்றார். இவ்வாறு தான் வருண் தவானுக்கு சல்மான் கான் திரையில் வாய்ப்பு வாங்கி கொடுக்கிறார்.

Loading...

Comments

comments