முதல்வர்களை அடையாளம் காட்டியதே சின்னம்மாதானாம் …ஒதுக்கி வச்சா எப்படி.. பொருமுகிறார் கருணாஸ்!

எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா முன்பாக ஜெயலலிதா படத்தில் சத்தியம் செய்தனர் என்று கருணாஸ் என்றும், சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தனி அணியாக செயல்படுகிறார். இதில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரும் தனியாக உள்ளனர்.

சசிகலாவுக்கு ஆதரவு:

யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி இவர்கள் மூவரும் ஆலோசனை நடத்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,

சசிகலா மூலமாக தான் எம்.எல்.ஏ வாய்ப்பு எனக்கு கிடைத்தது டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களையும் எடப்பாடி அழைத்து பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடையாளம் காட்டிய சசிகலா: இரண்டு முதல்வர்களையும் அடையாளர் காட்டியவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் படத்தின் மீது சத்தியம் செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்தனர்.

 

ஒதுக்க கூடாது:

சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி நடத்த கூடாது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் சசிகலா என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

Loading...

Comments

comments