வசூலில் பாகுபலி 2 படத்தை முந்தி சாதனை படைத்த விவேகம்

சென்னையில் அதிவேகத்தில் ரூ. 6 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது விவேகம். அஜீத் நடிப்பில் வெளியான விவேகம் படம் பாக்ஸ் ஆபீஸில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

சிலர் வேண்டும் என்றே படம் பற்றி நெகட்டிவ் விஷயங்களை பரப்பினாலும் அதனால் வசூல் பாதிக்கப்படவில்லை. தல ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.
ரூ. 6 கோடி சென்னை பாக்ஸ் ஆபீஸில் வேகமாக ரூ. 6 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது விவேகம். விவேகம் 5 நாட்களில் ரூ. 6.31 கோடியை சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

 


பாகுபலி சென்னை பாக்ஸ் ஆபீஸில் வார இறுதி நாட்கள் வசூலில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது விவேகம்.

பாகுபலி 2 ரிலீஸான மூன்று நாட்களில் ரூ. 3.24 கோடி வசூலித்தது. விவேகமோ ரூ. 4.28 கோடி வசூலித்துள்ளது.விவேகம் படத்தை சிலர் கழுவிக் கழுவி ஊத்தினாலும் படம் வசூலில் சாதனை செய்து வருவதை பார்த்து அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடின உழைப்பு வீண் போகாது என்கின்றனர்.சென்னை ரோஹினி சில்வர் ஸ்கிரீன்ஸில் டிக்கெட் முன்பதிவிலும் பாகுபலி 2 பட சாதனையை விவேகம் முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் மேலும் ஒரு சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

 

Loading...

Comments

comments