ஈறு பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சில இயற்கை வழிகள்!

சமீபத்திய ஆய்வு ஒன்றில் 75 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஈறு நோய்களால் அவஸ்தைப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு மோசமான வாய் சுகாதாரம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும். ஆரம்பத்திலேயே வாயில் ஏற்படும் பிரச்சனைகளைக் கவனித்து சரிசெய்தால், நோய்த்தொற்றுகள் தீவிரமாவதைத் தடுக்கலாம்.
வாயில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளான ஈறு வீக்கம், இரத்தக்கசிவு மற்றும் கடுமையான வலியின் மூலம் வெளிப்படும். வாயில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றுகளை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும்.
மேலும் ஈறு பிரச்சனைகள் ஒருசில நோய்களின் அறிகுறியாகவும் இருப்பதால், ஈறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண முயல வேண்டும். சரி, இப்போது ஈறு பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள் குறித்து காண்போம்.

ஆயில் புல்லிங்
இது ஒரு பழங்கால முறை. அதற்கு தினமும் காலையில் எழுந்ததும், வாயில் நல்லெண்ணெயை ஊற்றி, சிறிது நேரம் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் மற்றும் இதர வாய் பிரச்சனைகள் நீங்கும்.

மஞ்சள்
மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் உள்ளது. அதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, டூத் பிரஷ் கொண்டு பற்கள் மற்றும் ஈறுகளைத் தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைடை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பல் சொத்தை, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் மற்றும் ஈறு நோய்களும் நீங்கும்.

பூண்டு
தினமும் சிறிது பூண்டு துண்டை வாயில் போட்டு மென்று வர, அதில் உள்ள மருத்துவ குணமிக்க ஆன்டி-பாக்டீரியல் பொருள், ஈறுகளைத் தாக்கிய கிருமிகள் அழிக்கப்பட்டு, ஈறு நோய்கள் பரவுவது தடுக்கப்படும்.

உப்பு தண்ணீர்
தினமும் 3-4 முறை உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் செய்து வந்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

சேஜ் இலைகள்
சற்று கசப்புடன் இருக்கும் சேஜ் இலைகளை வாயில் சிறிது போட்டு மென்று வர, ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்பட்டு, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகயில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வேப்பிலை
வேப்பிலை மரம் உங்கள் வீட்டில் இருந்தால், தினமும் வேப்பிலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று வர, வாயில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம், சொத்தை பல் மற்றும் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

Loading...

Comments

comments