வாழைப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் நடக்கும்??

வாழைப் பழம் எளிமையானது. எல்லாருக்கும் பிடித்தது. இனிமையானது. வாழைப் பழ காமெடியும் நகைச்சுவையானது என இந்த பழத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை சத்துக்கள் நிறைந்தவை. எல்லா விட்டமின்களும் ஒருசேர வாழைப்பழத்தில் மட்டும்தான் இருக்கிறது. அதோடு பொட்டாசியம் மற்றும் நார்சத்துக்களும் உள்ளது.
பொட்டாசியம், உடலிலுள்ள செல்களில் சோடியத்தை அதிகப்படுத்தாமல் கட்டுக்குள் வைக்கும் பண்பு கொண்டவை. பொட்டாசியம் அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. அதோடு நார்சத்தும் சேர்ந்து இதயத்தை மிக பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்.

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
கண்ணிற்கு நல்லது. ஒரு நாளைக்கு உணவுகளோடு ஒரு வாழைப்பழமும் சேர்ந்து சாப்பிட்டால் தேவையான சத்துக்கள் நிறைவுபெறும் என சொல்லலாம்.
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மை நடக்கும் என பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல் :
உங்கள் இரைப்பை மற்றும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்தால், ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். உடனே அமிலங்கள் சுரப்பது கட்டுப்படும். நெஞ்செரிச்சல், அஜீரணம் ஆகியவை குணப்படுத்துபவை. முக்கியமாய் வயிற்றில் புண்களை ஆற்றும் தன்மை கொண்டவை.

மலச்சிக்கல் :
நாள்தோறும் காலைக் கடனை முடிக்க முடியாமல் திணறுபவர்கள் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதிலுள்ள அதிகப்படியான நார்சத்து குடலில் நெகிழ்வுத்தன்மையை தருகிறது. மலத்தை இளக்குகிறது.

சோர்வான நேரத்தில் :
உடலில் அதிகபடியான சக்தி மற்றும் நீர் இழக்கும்போது மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள். உடனடியாக வாழைப்பழம் எடுத்துக் கொண்டால் உடலிலுள்ள நுண் சத்துக்களை சமன் செய்யும். உடனடி எனர்ஜி கிடைக்கும்.

பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் ;
வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பிற்கு காரனமான சோடியம் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் பக்க வாதம் வராமல் காக்கும்.

ரத்த சோகை :
வாழைப்பழத்தில் இரும்புச் சத்து உள்ளது. தினம் வாழைப்பழம் சாப்பிட்டால் அனிமியாவை கட்டுப்படுத்தலாம். இது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.

ஜீரண சக்தி அதிகரிக்க :
கல்லீரலை பலப்படுத்தும். பசியை தூண்டச் செய்யும். நல்ல பேக்டீரியாக்களை பெருகச் செய்யும். இதனால் அஜீரணத்தை சரிபடுத்தலாம்.

அல்சரை தடுக்க :
வாழைப்பழம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை தடுப்பதோடு அதனால் உண்டாகும் புண்களையும் ஆற்றும். அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது.

வாழைப் பழத்தின் குண நலன்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இது விலை குறைவானது என்றாலும் இது தரும் நன்மைகளைப் பார்த்தால், வேறெந்த பழமும் போட்டி போட முடியாது. தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியம் இரு மடங்காகும்.

Loading...

Comments

comments