மூன்று நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் அற்புத டீ பற்றி தெரியுமா!

உடல் பருமன் என்பது தற்போது ஏராளமான மக்கள் அவஸ்தைப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனைக் குறைக்க பலர் பலவிதமான டயட்டுகள் மற்றும் ஜிம்களில் பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருவார்கள்.

இன்னும் சிலர் உடல் பருமனைக் குறைக்க கடுமையாக போராடாமல் எளிய வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். நீங்களும் எளிய வழியில் உடல் பருமனைக் குறைக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு டீயைத் தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.

பார்ஸ்லி
பார்ஸ்லி என்பது கொத்தமல்லியைப் போன்றே காணப்படும் ஒரு மூலிகை. இது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுத்தம் செய்யும். மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கவும் உதவும். பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதால், இது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

சரி, இப்போது இந்த பார்ஸ்லியைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க எப்படி டீ தயாரிப்பது என்று காண்போம்.
பார்ஸ்லி எங்கு கிடைக்கும் என்று பலர் கேட்கலாம். இது அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
பார்ஸ்லி – 5 (நறுக்கியது)
தண்ணீர் – 1 லிட்டர்

தயாரிக்கும் முறை:
முதலில் நீரை ஒரு பாத்திரத்தில் விட்டு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பார்ஸ்லியை சேர்த்து இறக்கி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும்.

ஒரு லிட்டர்
தினமும் இந்த நீரை நாள் முழுவதும் ஒரு லிட்டர் குடிக்க வேண்டும். உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என்பதற்காக இதனை ஒரு நாளைக்கு 1 லிட்டருக்கு மேல் குடிக்க வேண்டாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
பார்ஸ்லி ஆன்டி-ஆக்ஸிடன்ட் போல் செயல்பட்டு, ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் இது புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

Loading...

Comments

comments