இந்த 6 விஷயத்த உங்க ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாரும் பண்ண மாட்டாங்க!

நட்பை விட ஓர் சிறந்த உறவு இவ்வுலகில் இருந்து விட முடியுமா? நட்பின்றி ஓர் உயிர் தான் இவ்வுலகில் இறந்துவிட முடியுமா? பெற்றோர் இல்லாதவர்கள், சகோதர, சகோதரி இல்லாதவர்கள், மனைவி, காதலி இல்லாதவர்கள் பல பேர் இவ்வுலகில் இருக்கலாம். நட்பு இல்லாமல் ஒருவர் கூட இருக்க முடியாது.
நட்பு மனிதர்களுக்கு கிடைத்த ஓர் இன்றியமையாத வரம், உறவு. எதிர்பார்ப்பு இன்றி உங்களுடன் இணையும் ஒரே உறவு நட்பு தான். நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் கண்டிப்பாக நண்பன் இருப்பான். நண்பர்கள் இன்றி சில காரியங்களை நாம் செய்யவே மாட்டோம்.
ஆனால், அந்த நண்பர்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஆறு விஷயங்கள் இருக்கின்றன….

மாற்றமைவு
கடைசி நேரத்தில் ப்ளான் மாற்றினாலும் கூட, கூறியதை மாற்றி பேசினாலும் கூட மறுப்பு தெரிவிக்காமல் “ஓகே மச்சான்..” என்று தோள் மேலகைப்போட்டுக் கொண்டு வேறு எந்த உறவும் வராது.

அசௌகரியம்
ஒரு போதும் உங்களை அசௌகரியமாக உணர வைக்க மாட்டார்கள். அதே போல எந்த நண்பனும் தனக்கு இந்தந்த வசதிகள் இருந்தால் தான் வருவேன் என்று கூற மாட்டான். இதை வேறு எந்த உறவிடமும் எதிர்பார்க்க முடியாது.

எதிர்ப்பு
நீங்கள் கூறும் விஷயம் தவறாக இருந்தாலும், அல்லது அந்த முடிவால் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதுனும் சிக்கல் ஏற்படும் எனில், அதற்கு தங்களது முழு எதிர்ப்பை தெரிவித்து, உங்களை தடுப்பது உங்கள் நண்பனாக மட்டுமே இருக்க முடியும்.

தனிமை
பெரும்பாலும், எந்த ஒரு நண்பனும், தனது நண்பனை தனிமையில் வாட விடமாட்டன். இது நட்பின் சிறந்த பண்பு.

பொறாமை
திடீர் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம் போன்றவை ஏற்பட்டால் நண்பன் ட்ரீட் கேட்பானே தவிர பொறாமைப்பட மாட்டான்.

சோகம்
நண்பனின் சோகத்தை முழுமையாக துடைத்தெடுத்து, மீண்டும் அவனது பாதைக்கு பின் கொண்டுவருவது என்பது ஓர் நண்பன் இல்லாமல் இன்றியமையாதது.

Loading...

Comments

comments

Post Comment