கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள்! இதோ உங்களுக்காக!

தற்போது ஏராளமானோர் கண்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்ப்பது தான் முதன்மையான காரணம். இப்படி ஓய்வின்றி உற்று நோக்கும் போது, திரையில் இருந்து வெளிவரும் வெளிச்சம் கண்களை பாதிக்கிறது.
குறிப்பாக பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதால் ஏற்படுபவைகள். இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு போதிய கண் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இங்கு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பலமுறை மேற்கொண்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கண் பயிற்சி 1
முதலில் கருவிழிகளை மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். இப்படி 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.

கண் பயிற்சி 2
பின் கருவிழிகளை இடதுபுறம் வலதுபுறமாக நகர்த்த வேண்டும். இப்பயிற்சியை 1 நிமிடம் தொடர்ந்து செய்து, பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.

கண் பயிற்சி 3
அடுத்து கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். அதில் முதலில் வலதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு நிமிடம் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யயும்.

கண் பயிற்சி 4
பின் இடதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து 1 நிமிடம் கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

கண் பயிற்சி 5
அடுத்து கருவிழிகளை இடதுபக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பின்பு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.

கண் பயிற்சி 6
பின் கருவிழிகளை வலது பக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பிறகு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.

கண் பயிற்சி 7
அருகில் உள்ள ஒரு பொருளையும், தொலைவில் உள்ள ஒரு பொருளையும் 1 நிமிடம் பார்க்க வேண்டும். இப்படி செய்த பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.

கண் பயிற்சி 8
கண்களை மூடிக் கொண்டு கைவிரல்களால் படத்தில் காட்டியவாறு 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

Loading...

Comments

comments