விஸ்வரூபம் எடுக்கும் போலி இருப்பிட சான்றிதழ் விவகாரம்… 150 மாணவர்களின் மோசடி அம்பலம்!

 

மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்த விவகாரம் இந்த ஆண்டு விஸ்வரூபமெடுத்து வருகிறது.

இது வரை 150 பேர் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து இடம் பெற முயன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிய நிலையில் அவசர அவசரமாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தமிழக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடினமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

 

தமிழில் வினாக்கள் கடினமாக இருந்தது:

சிபிஎஸ், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களால் +2வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் பல மாணவர்களால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை.

இதனால் தமிழக மாணவர்கள் மருத்துவ தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியுள்ளனர்.இருப்பிட சான்று இருந்தால் இடம் நீட் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கையில் இந்தியாவில் எங்கு இருந்தாலும் தமிழகத்தில் 5 ஆண்டுகள் படித்திருந்ததற்கான இருப்பிட சான்றிதழ் அளித்தால் அவர்கள் தரவரிசையில் இடம்பெற்று கலந்தாய்வில் பங்கேற்று அரசு ஒதுக்கீட்டு இடத்தை பெற முடியும்.

இந்த சலுகையை பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் தமிழகத்திலும் இருப்பிட சான்றிதழ் பெற்று கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.

சிக்கிய 9 பேர் இது குறித்து அதிகாரிகள் ஒன்லைனில் சரிபார்த்த போது போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 9 பேரில் 3 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவருக்கு தனியார் கல்லூரியிலும் அரசு ஒதுக்கீட்டின் இடம் கிடைத்துள்ளது.

4 மாணவர்களிடம் விசாரணை ஒரு மாணவர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.

மேலும் 4 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மோசடியாக மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் அளித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

150 பேர் மோசடி இந்த இருப்பிடச் சான்றிதழ் மோசடியில் அடுத்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் ஏறத்தாழ 150 பேர் இது போன்று இரண்டு மாநிலங்களல் இருப்பிடச் சான்றிதழ் அளித்து மோசடியாக கலந்தாய்வில் பங்கேற்க வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குறித்து ஆவணங்கள் திரட்டப்பட்டு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மோசடி வேலையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சம்மன் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Loading...

Comments

comments