பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹிம் சிங்கிற்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங்
இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதையடுத்து வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதைஇ கோர்ட்இ இன்று அறிவித்தது. நீதிபதி முன்னியில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சிபிஐ கோர்ட் நீதிபதியான ஜக்திப் சிங், பஞ்ச்குலா கோர்ட்டில் வாதத்தை நடத்தாமல் ராம் ரஹிம் அடைக்கப்பட்டுள்ள ரோத்தகி மாவட்ட சிறையிலுள்ள நூலகத்தை தற்காலிக நீதிமன்றமாக மாற்ற உத்தரவிட்டார்.

சாலை மார்க்கமாக வருவது நீதிபதிக்கு பாதுகாப்பு இல்லை என கருதியதால் ஹெலிகாப்டர் மூலம் சிறை வளாகத்திற்கு நீதிபதியும் அவரின் உதவியாளர்களும் வந்தனர். இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களையும் தலா 10 நிமிடங்களுக்குள் வாதிடுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். முதலில் வாதத்தை தொடங்கிய சிபிஐ தரப்பு ராம் ரஹிமுக்கு அதிகபட்ச தண்டனையான 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்க கேட்டுக்கொண்டது.

அதேநேரம் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர் கார்க் நர்வானா தனது கட்சிக்காரர் வயது முதிர்வை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராம் ரஹிமுக்கு 10 வருட கால கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் 3 வழக்கு பிரிவுகளுக்காக தலா ரூ.50000 ரூ.10000 ரூ.5000 அபராதம் விதித்தார் நீதிபதி. மேலும், மற்ற கைதிகளை போலவே சாதாரணமாக இவரை நடத்த வேண்டும் சிறப்பு சலுகைகள் வழங்க கூடாது என கண்டிப்புடன் கூறினார் நீதிபதி.

Loading...

Comments

comments

Post Comment