கணவன் தொட்டால் அலர்ஜி, விசித்திர கோளாறால் அவதிப்படும் மனைவி!

நம்மை சுற்றி இருக்கும் எந்த ஒரு விஷயமும் நமக்கு அலர்ஜியாக அமையலாம். பெயின்ட், காபி, மரம், மணல் என எதுவாக கூட இருக்கலாம். ஆனால், ஜோஹன்னா எனும் பெண் ஒரு விசித்திர அலர்ஜியால் அவதிப்பட்டு வருகிறார்.
கட்டிய கணவன் ஜோஹன்னாவிற்கு அலர்ஜியாக இருக்கிறார். ஒருவரின் வாழ்வில் அடிப்படை விஷயங்களாக இருக்கும் அனைத்தும் ஜோஹன்னாவிற்கு அலர்ஜியாக இருக்கிறது.
அப்படி என்னவெல்லாம் ஜோஹன்னாவிற்கு அலர்ஜி என நீங்களே பாருங்கள்.

அரியவகை கோளாறு!
ஜோஹன்னா வாட்கின்ஸ், இவருக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறு மாஸ் செல் ஆக்டிவேஷன் சின்றோம். (Mass cell activation syndrome – MCAS). இந்த கோளாறால், இவரது செல்கள் தவறான கெமிக்கல்களை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வெளியிடுகிறது. இதனால், இவருக்கு நுகரும் திறனில் தாக்கம் உண்டாகிறது.

பெற்றோர்!
தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளும் கூட இவருக்கு அலர்ஜி தான். யாரேனும் தொட்டால் இவருக்குள் அந்த தவறான கெமிக்கல் ரியாக்ஷனின் தூண்டுதல் ஆரம்பித்துவிடுகிறது.
இவர் தனது தோழியின் வீட்டில், கதவு, ஜன்னல்களை சீல் செய்து பூட்டி வாழ்ந்து வருகிறார். அந்த அறையில் காற்றை சுத்திகரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவர் மருத்துவரை காண மட்டுமே வெளியே வந்து செல்கிறார். மற்ற நேரங்களில் இவரது அறையில் மட்டுமே இருப்பார்

தீவிரம்!
இவரது நுகரும் அலர்ஜி தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இவர் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு வருகிறார். அதும் கடந்த ஒரு வருடமாக. கேரட், வெள்ளரி, போன்று ஒருசில உணவுகளை மட்டுமே இவரது அன்றாட உணவாக இருந்து வருகிறது. நீராகாரம் என இவர் எடுத்துக் கொள்வது தண்ணீர் மட்டுமே.

இயல்பு வாழ்க்கை!
ஜோஹன்னா வாட்கின்ஸ் மற்றும் இவரது துணை ஸ்காட் அன்யோன்யமான காதலர்கள். ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது ஒரே ஆசை, அனைவரையும் போல ஒரு இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மட்டுமே. ஜோஹன்னாவின் இந்த விசித்திர அலர்ஜி காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஒரே வீடு!
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்காட் கீழேயும், ஜோஹன்னா மேலேயும் தங்கி இருக்கிறார்கள். புதியதாக ஜோஹன்னா-க்காக ஸ்காட் ஒரு வீடு கட்டினார். ஆனால், அந்த வீட்டின் பெயின்ட் வாசம் இவருக்கு அலர்ஜி ஆவதால் இவரால் அங்கு தங்க முடியாமல், பழைய வீட்டிற்கே வந்துவிட்டார்.

காதல்!
ஸ்காட் மற்றும் ஜோஹன்னா ஸ்கைப் காலில் தான் பேசிக் கொள்கிறார்கள். ஒரே வீடாக இருந்தாலும், ஜோஹன்னா அருகில் கூட இருக்க முடியாத சூழல். ஆனாலும், “என்னால் அவள் அருகில் செல்ல முடியாது, என்னால் அவரை கட்டியணைக்க முடியாது. அது அவளுக்கு வலியை தரலாம். அதே சமயத்தில் என்னால் அவளை காதலிக்காமலும் இருக்க முடியாது” என்கிறார் ஸ்காட்.

Loading...

Comments

comments