மனநலம் பாதிக்கப்பட்டுள்ள தினகரன்! அதிர்ச்சியில் தொண்டர்கள்

தமிழக அரசியலில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. தொலைக்காட்சி முதல் இணைய ஊடகங்கள் வரை அனைத்திலும் பரபரப்புச் செய்திகளும், முக்கிய செய்திகளுமாகவே அண்மைக் காலங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்ததோடு, பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகிச் சென்று எடப்பாடிக்கான தமது ஆதரவை நீக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு தானே துணை பொதுச்செயலாளர் என அறிவித்துக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தினகரன் செயல்படுவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கியுள்ள இந்த பேட்டியினையடுத்து தினகரன் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Loading...

Comments

comments