புதிதாக சிற்றூர்ந்து வாங்க உள்ளவரா நீங்கள்..? உங்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஐபோனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2017 ஆண்டிற்கான ஆப்பிள் அறிமுக விழா சார்ந்த தகவல்களை ஆப்பிள் தொடர்ந்து மர்மமாக வைத்திருக்கிறது. ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாதத்தில் புதி ஐபோன்கள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டின் ஐபோன் வெளியீடு சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆப்பிள் வழக்கப்படி புதிய ஐபோன் செப்டம்பர் மாதத்தில் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஆண்டு ஆப்பிள் விழாவில் ஐபோன் 8, ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஐபோன் 8 சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி புதிய ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களும் 512ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. புதிய ஐபோனின் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி சிப்செட்கள் டோஷிபா மற்றும் சான்டிஸ்க் வழங்கும் என்றும் 512 ஜிபி சிப்களை சாம்சங் மற்றும் ஹைனிக்ஸ் வழங்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோனில் 4K தரவுகளை இயக்கும் வசதி வழங்கப்பட இருப்பதாலேயே மெமரி அளவு அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் இந்த ஆண்டின் ஆப்பிள் அறிமுக விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்றும் இவை செப்டம்பர் 15 முதல் 22-ம் தேதிவாக்கில் முன்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீராக விநியோகம் செய்யப்படும் என்றும் ஐபோன் 8 முதற்கட்டமாக குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் OLED பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமராஸ செயற்கை நுண்ணறிவு அம்சம், 3D சென்சிங் வசதி கொண்ட முன்பக்கம் மற்றும் பின்புற கேமரா, ஃபேஷியல் ரெக்கஃனீஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது

Loading...

Comments

comments