வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழி

உணவு முறையை சரியாக பின்பற்றி வருவதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பை ஒரே மாதத்தில் எளிதில் குறைக்க முடியும். அதற்கான சிறந்த வழி ஒன்று உள்ளது. வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் வழி? சர்க்கரை, கொழுப்பு மற்றும் உயர்ந்த கலோரி உள்ள உணவுகளான பிஸ்கட், கேக் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளினால் உண்டாகும் உடல் எடையை உடற்பயிற்சியின் மூலம் குறைக்க முடியாது. தினமும் 8- 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். ஏனெனில் அது நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் நீரின் வழியாக வெளியேற்றி, உடலின் வளர்ச்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது.
நட்ஸ், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் இவை அனைத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், இதனால் பசி உணர்வு அடிக்கடி ஏற்படாது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஓடுதல், நடனம், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், இதனால் இதயத்தின் செயல்பாடு அதிகமாகும்.

Loading...

Comments

comments