இதய நோய் வராம இருக்கணுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க…

உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு என்பது அனைவருக்குமே தெரியும். இதயத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடலையும் ஒருபதம் பார்த்துவிடும். மோசமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருபவர்கள் கட்டாயம் ஒரு கட்டத்தில் இதய நோயால் அவஸ்தைப்படுவார்கள்.

ஆகவே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமானால், உடலை ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உதவும். இங்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் ஜூஸ் – 1/2 கப் இஞ்சி சாறு – 2 டேபிள் ஸ்பூன்

முட்டைக்கோஸ் முட்டைக்கோஸில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, இதயத்தில் இரத்த ஓட்டத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்

இஞ்சி இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தின் தசைகளை வலிமைப்படுத்தி, நீண்ட காலம் இதயம் ஆரோக்கியமாக இருக்க செய்யும்

தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஜூஸையும் ஒன்றாக கலந்து, தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும்.

குறிப்பு இந்த பானத்தை ஒருவர் குறைந்தது 2 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் எவ்வித பிரச்சனைகளுமே ஏற்படாது.

Loading...

Comments

comments