அழுகையின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நமக்கு வருத்தம் ஏற்படும் போது மட்டுமே அழுகை வருவதாக நாம் பெரும்பாலும் கருதுகிறோம். வருத்தம் அழுகையை உண்டு பண்ணுவது உண்மையெனினும் அழுகைக்கு வேறு காரணங்களும் உள்ளன. நமது வாழ்நாளில் 25 கோடி தடவை அழுவதாக உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

OLYMPUS DIGITAL CAMERA

நமது கண் இமைகள் தோலின் மடிப்புகளே. அவை நாடக மேடையின் திரைகளை போலவே மேலே எழுகிறது. கீழே இறங்குகிறது.

இந்த இயக்கத்தை தசை நார்கள் நடத்துகின்றன. கண் இமைகள் மேலே எழுவதும், கீழே இறங்குவதும் நொடிப்பொழுதில் நிகழ்கின்றன. எனவே நமது பார்வை அதன் விளைவாக பாதிக்கப்படுவதில்லை. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது நமக்கு தெரியாது. கண் இமைகள் நமது ஆயுள் முழுவதிலும் 6 வினாடிக்கு ஒரு முறைக்கு தாமாகவே திறந்து கொள்வதிலும் மூடிக் கொள்வதிலும் ஈடுபடுகின்றன.

ஒவ்வொரு கண்ணிலும் சுரப்பி உள்ளது. அது கண்ணின் வெளிப்புற மூலையில் மேலே இருக்கிறது. கண்ணின் மேல் இமைக்கு கண்ணீரை கொண்டு போக இழைமானங்கள் உள்ளன. கண்ணின் முன்புறத்தில் இருந்து கண்ணீரை கொண்டு போவதற்கு கால்வாய்களும் உள்ளன.

கண் இமைகளை இமைக்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் இழைமானங்களின் திறப்புகளில் இருந்தும் உறிஞ்சல் ஏற்படுகிறது. அதன் பயனாக ஒரு வகையான திரவம் வெளிப்படுகிறது. விழித்திரைக்கு நீர் பாய்ச்சவும், அது உலர்ந்து போகாமல் தடுக்கவும் இந்த செயல்முறை நடைபெறுகிறது.

மேல் எழுந்த வாரியாக பார்த்தால் இதற்கும் அழுகைக்கும் வேற்றுமை இல்லை. நாம் அழும் போதும், இந்த செயல்முறை நடைபெறுகிறது.

நாம் வரம்பு மீறிச்சிரிக்கும் போதும் கண்ணீர் வருகிறது. இதற்கு காரணம் என்ன? கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்துவதால் கண்ணீர் வெளியே பெருகுகிறது.
OLYMPUS DIGITAL CAMERA

சோக உணர்ச்சி இல்லாமல் இருக்கும் போதே வெங்காயம் நமக்கு கண்ணீரை உண்டு பண்ணுகிறது. இதற்கு காரணம் வெங்காயம் விரைவில் ஆவியாக மாறும் தன்மையுள்ள ஒரு பொருளை வெளிப்படுத்துகிறது. அது நம்முடைய கண்களை அடையும் போது எரிச்சல் உணர்ச்சி ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்வதற்காகவே கண்ணீரை பெருக்குகிறோம். எரிச்சலை உண்டு பண்ணும் கண்ணீர் ஆவியாக மாறும் பொருளை அகற்றி விடுகிறது.

புகை ஏற்படும் போதும், நமது கண்ணுக்கு எரிச்சல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் கண்ணீர் விடுகிறோம்.

வருத்தம் ஏற்படும் போது அழுகின்றோம் அதாவது கண்ணீர் விடுகின்றோம். மனிதன் மட்டுமே தனது உணர்ச்சியை வெளியிடுவதற்காக கண்ணீர் விடுகிறான். விலங்குகள் இதற்கு விதிவிலக்கு. சிந்திக்கும், உணர்ச்சி வசப்படக்கூடிய நபரே கண்ணீர் விடுகிறான். பச்சிளம்குழந்தைகள் கத்துகின்றன. அழுவதில்லை. சிந்திக்கவும், உணரவும் கற்றுக்கொண்ட பிறகு அழுகின்றன.

நமது உணர்ச்சிகள் சொற்களாக வெளிவராத நிலையில் என்ன ஏற்படுகிறது? அந்த உணர்ச்சிகள் கண்ணீரை தேக்கி வைத்துள்ள சுரப்பிகளில் நுழைகின்றன. நம்மை அறியாமலே கண்ணீர் விடுகிறோம். நமது உணர்ச்சிகளை சொற்கள் மூலமாக வெளியிட முடியாத போது நமது உடல் கண்ணீரை விடுவிப்பதற்கு உபாயத்தை கண்டுப்பிடித்து வைத்திருக்கிறது.

Loading...

Comments

comments

Post Comment