ஞாபக சக்தியை அதிகரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நாம் சாப்பிடும் சில உணவுகள் நினைவுத் திறனை அதிகரித்தால், சில உணவுகள் அதற்கு எதிர்மறையாக செயல்படும். நீங்கள் நினைவுத் திறனை அதிகரிக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

வரவர உங்களால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையா? உங்களின் நினைவுத் திறன் இப்படி மோசமாவதற்கு காரணம் நீங்கள் சாப்பிட்டு வந்து கொண்டிருக்கும் தவறான உணவுகள் தான்.

நாம் சாப்பிடும் சில ஆரோக்கியமான உணவுகள் நம் நினைவுத் திறனை அதிகரித்தால், சில உணவுகள் அதற்கு எதிர்மறையாக செயல்படும். எனவே நீங்கள் உங்களது நினைவுத் திறனை அதிகரிக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

கடல் உணவுகள்

கடல் உணவுகளான மீனில் மெர்குரி அதிகமாக உள்ளது. மெர்குரி புலனுணர்வு செயல் பிறழ்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆய்வு ஒன்றில், சூரை மீன் மற்றும் இதர மீன்களை வாரத்திற்கு மூன்று முறைக்கு அதிகமாக உட்கொண்டு வந்தவர்களுக்கு புலனுணர்வு செயல் பிறழ்ச்சி ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள்

ட்ரான்ஸ் கொழுப்புக்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், நினைவுத் திறன் குறையும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டு, நினைவுத் திறனில் இடையூறு ஏற்படும். எனவே சர்க்கரை உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

உப்பு உணவுகள்

உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அதனால் இதயம் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. உடலில் சோடியத்தின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நினைவுத் திறன் பாதிக்கப்படும்.

சாச்சுரேட்டட் கொழுப்புக்கள்

பிட்சா, பாஸ்தா போன்றவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் சீஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்புக்களை அதிகம் சாப்பிட்டால், நினைவுத் திறன் மோசமாக பாதிக்கப்படும்.

Loading...

Comments

comments