விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்

விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். கைதி No.150 என்ற பெயரில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

சென்னையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாப் தமிழ் நடிகர்கள் போல இந்த படத்திற்கும் அதிகாலை 5 மணி காட்சிகள் ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

முதல் நாள் வசூல் விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 47.7 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது கைதி No.150.

நாளையே 50 கோடியை தாண்டிவிடும் என்பதால் கைதி No.150 முதல் வார வசூல் சாதனை பட்டியலில் முதலிடம் பிடிப்பது நிச்சயம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Loading...

Comments

comments