தமிழகத்தில் முதல்முறையாக புதிய வரலாறு படைத்த ‘பைரவா’

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் திரையிடவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர், கட்-அவுட், போஸ்டர் ஒட்டுதல் ஆகியவற்றில் பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கம் என்பது விஜய்யின் ஸ்பெஷல் திரையரங்கம் என்று சொல்லலாம். இந்த திரையரங்கில் விஜய்யின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது மிக உயரமான கட்-அவுட் வைப்பது வழக்கம். ‘கத்தி’ படத்தின் ரிலீசின்போது இந்த திரையரங்கில் 140 அடி கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடம் ஸ்பெஷல் அனுமதி பெற்று ‘பைரவா’ படத்திற்கு 150 அடி கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய கட்-அவுட் வைக்கப்படுவது இதுதான் முதல்முறை.

Loading...

Comments

comments