மலச்சிக்கலே வராது: இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்

மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட்டு, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

வயிற்றுப் பிரச்சனைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு டம்ளரில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1/2 டம்ளர் பால் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
1/4 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 1/2 டம்ளர் சுடுநீரை 3 முறை குடிக்க வேண்டும்.
வயிற்றில் விளக்கெண்ணெயை நன்கு தடவி, பின் ஒரு காட்டன் துணியை வயிற்றின் மீது விரித்து, சுடுநீர் நிரப்பிய பாட்டிலால் வயிற்றுப் பகுதியை 45 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு கப் சுடுநீரில் ஊற்றி, நன்கு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு 10 நிமிடம் கழித்து வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நன்மைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் விளக்கெண்ணெயை மேல் கூறப்பட்டுள்ளதை போல் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கி, வயிறு மற்றும் ஒட்டு மொத்த உடலும் சுத்தமாகும்.
விளக்கெண்ணெய் இயற்கை மலமிளக்கியாக செயல்படுவதால், வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, மலச்சிக்கல் மற்றும் அடிவயிற்று வலி போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

Loading...

Comments

comments

Post Comment